கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது உலகளாவிய விற்பனை மாநாட்டின் (Global Sales Conference) மூலம் உலகின் பயணத் தொழிற்துறையை வியக்க வைத்துள்ளது.
விமான சேவையின் முன்னணி சர்வதேச முகவர்கள் மற்றும் பயண செயற்படுத்துனர்கள் சுமார் 200 பேரின் பங்கேற்புடன் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இந்த மாநாடு கடந்த நவம்பர் 24ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் செயற்பாட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கியதுடன், இலங்கையை ஒரு தலைசிறந்த சுற்றுலா மையமாக மாற்றும் கண்கவர் காட்சிகள், வனஜீவராசிகள், வரலாறு, உணவு வகைகள் மற்றும் கலாசாரம் பற்றிய மனதை ஈர்க்கும் கண்ணோட்டத்தை வழங்கியது.
பங்கேற்பாளர்கள் இந்திய துணைக் கண்டம் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விரிந்த நேரடி வலையமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பொது விற்பனை முகவர்கள், பயண முகவர்கள், பயண செயற்படுத்துனர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் சுற்றுலா செயற்படுத்தல் பிரிவான ஸ்ரீலங்கன் ஹாலிடேஸின் உரிமையாளர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கவனமாக தெரிவுசெய்யப்பட்ட சுற்றுப்பயணங்கள் மூலமாகவும், விமான சேவையின் உலகளாவிய விற்பனைக் குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்தும், அவர்கள் இலங்கையின் சில முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பத்தையும் பெற்றனர்.
சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இடம்பெற்ற இந்த மூன்று நாள் நிகழ்வு இலங்கையின் உயிர்த்துடிப்பான கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களின் பிரவாகமாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்வின் அனைத்து அலங்காரங்கள் மற்றும் பல பாரம்பரிய நடனங்களின் ஊடாக பங்கேற்பாளர்கள் ஒரு முழுமையான சிறிய வடிவிலான பெரஹரவை கண்டுகளித்த மகிழ்ச்சியை அடைந்ததுடன், அதன் முடிவில் இதுபோன்ற அம்சங்களை அவர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும் வகையில் அவை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதான மாநாடு ஹம்பாந்தோட்டையில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றதுடன், இது பல தொழிற்துறை நிபுணர்களை ஒன்றிணைத்ததுடன், பயண சேரிட சந்தைப்படுத்தலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எதிர்கால முயற்சிகளை வடிவமைக்கும் ஊக்கமளிக்கும் உரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
Trip.comஇன் பசுபிக், தென்கிழக்கு ஆசியா, இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய விமான நிறுவன பணிப்பாளர் கிர்க் வோங், Jetwing Symphony PLCஇன் தலைவர், பங்காளர் செயல்திறன் தலைவர் ஹிரான் குரே, சேனல் சேல்ஸ் SEA Travel trends மற்றும் Google சந்தை மீட்பு, தாரா யூன் மற்றும் Barmy Armyஇன் முகாமைத்துவ பணிப்பாளர், கிறிஸ் மில்லார்ட் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு மற்றும் ஜோன் கீல்ஸ் குழும பொழுதுபோக்கு துறையின் சிரேஷ்ட உப தலைவர் திலீப் முததெனிய ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததுடன், ஒரு குழு கலந்துரையாடலிலும் பங்குபற்றினர்.
“உலகம் முழுவதிலுமிருந்து பயண முகவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து, அவர்கள் இந்த ஆச்சரியம் மிக்க நாட்டை அனுபவித்து, இலங்கையை ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் பாதுகாப்பான சுற்றுலா தலமாக மேம்படுத்தும் உத்வேகத்துடன் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இலங்கையுடன் ஓர் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும், இலங்கையில் எவற்றையெல்லாம் விற்பனை செய்ய முடியும் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவும் இந்த திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தனது வரவேற்பு மற்றும் சிறப்பு உரையின்போது குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு உலகளாவிய விற்பனை மாநாடு எங்கள் இலக்குகளை தாண்டிச் செல்ல எங்களுக்கு உதவியது.
மேலும், இந்த ஆண்டும் அவ்வாறே இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மாநாட்டின் போது நாங்கள் பகிர்ந்துகொண்ட வர்த்தகத் திட்டங்களுக்கு எங்கள் முகவர்களின் ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், இது இந்த ஆண்டு இன்னும் சிறந்த பெறுபேறுகளை வழங்கி எமது இலக்குகளை அடைந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்” என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் கூறினார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் வலையமைப்பு மற்றும் விமான தொகுதி விரிவாக்கத் திட்டங்களையும் அத்துடன் IATAஇன் புதிய விநியோகத் திறன் (NDC) தீர்வுகளின் அடிப்படையில் முகவர்களுக்கான முன்பதிவு தளமான 'SriLankan Direct Connect'இன் வரவிருக்கும் சர்வதேச வெளியீடுகள் பற்றியும் அவர் இங்கு கருத்துரை வழங்கினார்.
“ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல்வேறு சந்தைகளில் இருந்து இலங்கைக்கு உள்வரும் பயணத்தை ஊக்குவித்து எப்போதுமே சுற்றுலாத்துறையில் முன்னணியில் இருந்து வருகிறது.
எங்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகள் வளர்ந்து வரும் சுற்றுலாப் பயணப் போக்குகளை ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் மறைந்திருக்கும் பல்வேறு பெறுமதி வாய்ந்த அம்சங்களையும் முன்னிலைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எமது பிரச்சார நடவடிக்கைகள் இலங்கை பற்றிய அனுபவ பட்டியலை வெளிக்கொண்டு வருவதோடு, இந்த தீவு தேசத்தின் உள்ளார்ந்த இசையை வடிவமைக்கும் வெவ்வேறு விருவிருப்பான அம்சங்கள், பண்பாடுகள் மற்றும் மெல்லிசைகளை படம்பிடித்துக் காட்டுகின்ற வகையில் அமைந்துள்ளது” என்று விமான நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறான முன்னெடுப்புகள் என்ற தனது உரையின்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சந்தைப்படுத்தல் தலைவர் சமிந்த பெரேரா மேலும் கூறினார்.
இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புத்தம் புதிய விமான பாதுகாப்பு காணொளியின் முக்கிய அம்சங்களை காட்சிப்படுத்தியமையாகும். இது ஒரு தசாப்தத்துக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வரும் தற்போதைய பாதுகாப்பு காணொளிக்கு பதிலீடாக தயாரிக்கப்பட்டதாகும்.
புதிய பாதுகாப்பு காணொளியானது இலங்கையின் இயற்கைக் காட்சிகள் மீதான அவசரகால நடைமுறைகளை விளக்குகிறது. வருகை தந்த பிரதிநிதிகள் தங்களின் ஒட்டுமொத்த அனுபவத்தில் மிக்க மகிழ்ச்சியாக காணப்பட்டதுடன், இலங்கையில் தாம் கழித்த நாட்கள் பற்றி இவ்வாறு வியந்து பேசினர்.
“இது ஒரு ஆச்சரியமான அனுபவம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைத்துவக் குழுவுடன் இணைந்து அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் விரிவாக்கங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொலைநோக்குடன் எங்கள் நிறுவனத்தின் இலக்குகளை சீரமைப்பதற்கும், இந்தியாவில் இலங்கையை பற்றி ஊக்குவிப்பதற்கும், எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ள எமது தற்போதைய விற்பனை மையங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதும் மிகவும் விவேகமான நடவடிக்கையாக இருந்தது” என்று டில்லியை தளமாகக் கொண்ட உலகளாவிய பயண நிறுவனமான Belair நிறுவனத்தின் அமித் பர்தாசானி தெரிவித்தார்.
“பாரிஸிலிருந்து ஒரு சிறந்த விமானத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்த எனக்கு இலங்கையில் ஓர் அற்புதமான அனுபவத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இது ஒரு ஆச்சரியமான நாடு. இந்த வாய்ப்புக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தகக் குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கைக்கு வரும்போது சிரித்துக்கொண்டு வரும் நாங்கள், விடைபெற்றுச் செல்லும்போது அழுதுகொண்டுதான் செல்ல வேண்டும்!” என்று பிரான்ஸ் நாட்டின் பயண செயற்படுத்துனரான Karavel-Promovacances ஆகியவற்றின் தலைவர் அலெக்ஸாண்ட்ரே பிகியார்ட் கூறினார்.
இவ்வருட நிகழ்வின் உத்தியோகபூர்வ நிகழ்விடப் பங்காளியாக ஷங்ரிலா ஹம்பாந்தோட்டை இருந்ததுடன், இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்படுத்துனர்களின் சங்கம் (SLAITO) மற்றும் இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (Sri Lanka Hotel Owners Association) ஆகியன இந்த முயற்சியில் விமான சேவைக்கு முழுமையான ஆதரவை வழங்கின.
இந்த மாநாடானது வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சேரிட முகாமைத்துவ நிறுவனங்களுக்கும் இடையில் 500க்கும் மேற்பட்ட சந்திப்பு, திட்ட ஏற்பாடுகளைக் கொண்ட B2B வலையமைப்பு அமர்வுடன் நிறைவுபெற்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மாநாடு அதன் நேர்மறையான பெறுபேறுகளைப் பெற்றுத்தந்த வருடாந்த நிகழ்வாக பதிவாகும்.
சர்வதேச பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா செயற்படுத்துனர்களுடன் இணைந்து இலங்கையை உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ந்தும் பணியாற்றும்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM