யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை ; 3 சந்தேநபர்கள் கைது

Published By: Digital Desk 3

13 Dec, 2023 | 12:50 PM
image

யாழ்ப்பாணம், அச்சுவேலி - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 - 30 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையடித்த சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர்களை நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சி பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24