(எம்.மனோசித்ரா)
கிழக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் உடனடியாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை செத்சிறிபாயவில் அமைந்துள்ள கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து துரிதமாக பணிகளை நிறைவு செய்யுமாறு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் திட்டப் பணிப்பாளருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
மேலும் பணிகள் நிறைவடைந்துள்ள வீதிகளில் வீதி அடையாளங்கள், பெயர் பலகைகளை நிறுவுதல், வீதிகளில் வெள்ளைக் கோடுகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் அடையாளங்கள் போன்ற பணிகளை துரிதமாக முடிக்க செயற்திட்ட பொறியியலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM