களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை - மட்டக்களப்பு வீதியின் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இரு யுவதிகளையும் பொதுமக்களின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் தனியார் வகுப்புக்கு  கல்முனைக்குச் சென்று மீண்டும்  திரும்பிக் கொண்டிருந்தனர்.வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட காரானது வலப்பக்க சமிக்ஞை போடாமலும், கார் சாரதி கண்ணாடியை அவதானிக்காமலும் வலது பக்கம் காரை திருப்பியுள்ளார்.

இந்த நிலையிலேயே மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த இரு யுவதிகளும் படுகாயமடைந்துள்ளார்கள். அந்தோனியார். இச் சம்பவத்தில் 19 மற்றும் 20 வயதுடைய யுவதிகளின் கால்கள், இடுப்புக்களில் பலமாக அடிபட்ட நிலையிலேயே களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்துவந்து  கார் சாரதியை கைதுசெய்ததுடன் காரையும் மீட்டெடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.