இமயமலைப் பிரகடனம் தாமதமான முயற்சி வெற்றி பெறுவதிலேயே எதிர்காலம் உள்ளது உலகத்தமிழர் பேரவையிடம் சம்பந்தன் தெரிவிப்பு: சந்தேகங்கள் களையப்பட்டதாக ஹக்கீமும் அறிவிப்பு

Published By: Vishnu

13 Dec, 2023 | 11:31 AM
image

ஆர்.ராம்

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காணும் முயற்சியில் பௌத்த தேரர்கள் மற்றும் அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்தி உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முன்னெடுக்கப்படுவதாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதிலேயே தமிழர்களினதும், ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கியுள்ளது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இமயமலைப் பிரகடனத்தினை முன்னெடுக்கும் தரப்பினர் யார் என்பதில் தனக்கு பல சந்தேகங்கள் இருந்தபோதிலும், அவை யாவும் களையப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் தரப்பு முழுமையான ஒத்துழைப்புக்களை அளிக்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது தரப்பிலும் ஒழுமையான ஒத்துழைப்புக்கள் அளிக்கப்படும் என்றும் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் காணப்பட்ட இணைந்த செயற்பாடுகளையும் நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, குறித்த சந்திப்புக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி(இத்தரப்பினரை பிறிதொரு தருணத்தில் சந்தித்திருந்தது) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அத்தரப்பினர் பங்கேற்றிருக்கவில்லை. அதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கலையரசன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைத் தமிழரசுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இந்தச் சந்திப்பு தொடர்பில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில், 

இமயமலைப்பிரகடனம் தமிழ் மக்களின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களான ஹக்கீம், ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது.

இச்சமயத்தில், சம்பந்தன், பௌத்த தேரர்கள், அனைத்துக் கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஊடாக இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை அணுகும் முறைமையானது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும். 

துரதிஷ்டவசமாக எந்தவொரு தரப்பினராலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. விசேடமாக தமிழ் அரசியல்வாதிகளான தம்மால் கூட அவ்விதமான முயற்சிகளை முன்னெடுத்திருக்க முடியவில்லை. 

ஆந்த வகையில், இவ்விதமான புதியதொரு அணுகுமுறையானது தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அது வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியில் தான் தமிழர்களினது எதிர்காலமும், இந்த நாட்டின் எதிர்காலமும் தங்கியுள்ளது. 

ஒருமித்த நாட்டுக்குள் சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக தங்களது விடயங்களை தாங்களே தீர்மானிக்கும் வகையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்று காணப்பட வேண்டும். 

அதனை மையப்படுத்தியுள்ள இந்த பிரகடனம் முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு வெற்றி பெற வேண்டும். இதனை தென்னிலங்கை தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறிமாறிவந்த ஆட்சியாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை எமக்கு அளித்தார்கள். 

ஆனால், அவை எவையும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அந்த வகையில், ஆட்சியாளர்கள், ஒருவிடத்தினைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 1949இல் லீ குவான் யூ இலங்கைக்கு வருகை தந்து இலங்கையைப்போன்று சிங்கப்பூரை அமைக்கவுள்ளதாக கூறினார். 

இப்போது சிங்கப்பூர் எங்கே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் மோசமான பின்னடைவுகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். ஆகவே அதனைக் காண்பதன் உடாகவே எதிர்காலம் மிக்க நாடொன்றை கட்டியெழுப்ப முடியும்.  அந்த செயற்பாட்டில் இமயமலைப்பிரகடனம் மிகவும் காத்திரமானதொரு விடயமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53