ஜனவரி முதல் வற் வரி அதிகரிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 95 வகையான பொருட்களின் பட்டியல் வெளியீடு - அரசாங்கம்

12 Dec, 2023 | 05:44 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய 2024இல் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனவரி முதல் வரி அதிகரிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 95 வகையான பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி உணவுகள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், திரவ எரிவாயு, பெற்றோல், டீசல், மோட்டார் ரக வாகனங்கள், லொறி போன்ற கன ரக வாகனங்கள், கையடக்க தொலைபேசிகள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகள் என்பவை இதில் உள்ளடங்கும்.

அதே போன்று இலத்திரனியல் பொருட்கள், உயர் தொழில்நுட்ப பொருட்கள், மருத்துவ இயந்திரங்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், அம்புலன்ஸ், பொதியிடல் பொருட்கள், மருந்தக பொருட்கள், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்டவை உள்நாட்டு தேயிலை உற்பத்திகள், இறால், மீன் உற்பத்திகள் என்பவையும் வற் வரி அதிகரிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பால் உற்பத்திப் பொருட்கள், சீனி, சீனி உற்பத்திகள், மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உபகரணங்கள், இரத்தினக்கற்கள் உள்ளிட்டவை தங்கம், புத்தகங்கள், பத்திரிகைகள், பத்திரிகை அச்சிடும் கடதாசிகள், தொழிற்சாலை சார் இயந்திரப் பொருட்கள், பயிர் செய்கை இயந்திரங்கள், ஊடகத்துறைசார் உபகரணங்கள், பேக்கரி உற்பத்திகள், ஆபரணங்கள் என்பவையும் உள்ளடங்குகின்றன.

மென்பொருட்கள், மரக்கறி எண்ணெய், முதலீட்டு சபையுடன் தொடர்புடைய பொருட்கள், ஆடை தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், மின்சார சபை உபகரணங்கள், திரைப்படத்துறை, திரையரங்கு கட்டணங்கள், சர்வதேச தொடர்பாடல் கட்டணங்கள், பொது நூலகம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை சேவை கட்டணங்கள், கப்பல் சேவைக் கட்டணங்கள், ஹோட்டல் சேவை கட்டணங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25