(லியோ நிரோஷ தர்ஷன்)

தமிழ் பிள்­ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடி­யமை எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் மிக்­கது. இந்­நி­லையில், தெரிந்த மொழியில் அவர்­க­ளுக்கு தேசிய கீதத்தை பாட அனு­ம­திப்­பதா அல்­லது வாயை மூடி இருக்­கு­மாறு கூறு­வதா என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். 

சுவா­ஸி­லாந்து மற்றும் உகண்டா  ஆகிய நாடு­களின் முறை­மை­களை கைவிட்டு சிங்­கப்பூர் முறை­மைக்கு வந்­த­தை­யிட்டு முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வாழ்த்து கூறுவேன். சிங்­கப்­பூரில் இருந்து வரும் போது மஹிந்த ராஜ­பக் ஷ எனது விமா­னத்தில் வந்­தி­ருந்தால் நிச்­சயம் அதற்­கான கார­ணத்தை கேட்­டி­ருப்பேன். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக வர வில்லை. ஆனால் நிச்­சயம் கார­ணத்தை பாரா­ளு­மன்­றத்தில் கேட்பேன் எனவும் பிர­தமர் தெரி­வித்தார்.  கிரா­மிய பொரு­ளா­தார விவ­கார அமைச்சின் புதிய கட்­டடத்தை நேற்று  திறந்து வைத்து உரை­யாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொட­ர்ந்தும் கூறு­கையில்,

கிரா­மத்­தி­லி­ருந்து வந்­துள்ள அமைச்சர் பீ.ஹரி­ச­னுக்கு கிரா­மத்து பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்யும் பொறுப்பை கைய­ளித்­துள்ளேன். கிரா­மத்து பொரு­ளாதா நிலை­களில் இருந்து மக்கள் நகர பொரு­ளா­தா­ரத்தை நோக்கி நகர்­கின்­றனர். மத்­திய கிழக்கு அல்­லது இத்­தாலி பொரு­ளா­தா­ரத்தை நோக்­கியும் நகர்­கின்­றனர். இந்­நி­லையில் கிரா­மத்து பொரு­ளா­தா­ரத்தை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்ப முடியும்? எனவே தான் பீ. ஹரி­ச­னிடம் அந்த பொறுப்பை கைய­ளித்­துள்ளோம். 

இந்த கட்­ட­டத்­திற்கு வரு­வ­தற்கு முன்னர் வடக்கு, தெற்கு என அனைத்து பகு­தி­க­ளையும் அவ­தா­னிக்­கு­மாறு கூறினேன். கட­வு­ளின் ஆசீர்­வா­தத்தை பெற்றுக் கொள்ள கூறினேன். தமிழ் மற்றும் வாஸ்து முறை­க­ளையும் பாருங்கள். மேலும் மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா, வியட்நாம், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்­பிலும் அவ­தா­னிக்­கப்­பட வேண்டும். மீண்டும் அரிசி தொடர்பில் பிரச்­சினை ஏற்­ப­டாதவாறு கட்­டடத்தை அமைத்து செல்லு மாறு ஆலோ­சனை வழங்­கினேன்.கிரா­மத்து பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தும் போது கால்நடைகள் துறையும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்­து­றைசார் உற்­பத்­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். பால் உற்­பத்­திக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்டும். கிரா­மத்தில் பிள்­ளை­க­ளுக்கு 5 வரு­டங்கள் இல­வ­ச­மாக பால் வழங்­கப்­பட வேண்டும். இதனை முன் வைத்து திட்­டங்கள் முன்­னெ­டுக்க அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் கோழி உற்­பத்­தியில் ஏற்­று­மதி பொரு­ளா­தார இலக்­கு­களை அடை­வ­தற்கு திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதனை போன்று மேலும் கிராமிய பொரு­ளா­தா­ரத்தில் பல பிரி­வு­களை அபி­விருத்தி செய்­வ­தும் அத­னூ­டாக முன்­னோக்கி செல்­வ­துமே எமது நோக்­க­மாகும். நாட்டின் பொரு­ளா­தாரம் தொடர்பில் புதி­தாக சிந்­திக்க வேண்டும். 

பல்­லா­யிரம் கோடி ரூபா கடனை மஹிந்த  ராஜ­பக் ஷ எமக்கு விட்டுச் சென்­றுள்ளார். அந்த கடனை 10 வரு­டங்­க­ளுக்குள் செலுத்தி முடிக்க வேண்­டி­ய­துள்­ளது. தேசிய கடன் சுமை இரட்­டிப்­பாகும். எமது வரு­மானம் கடனை செலுத்த பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.எனவே புதிய வரு­மான துறை­கள் கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யுள்­ளது. ெதாழில் வாய்ப்­புகள், சர்­வ­தேச முத­லீ­டுகள் மற்றும் தேசிய முத­லீ­டுகள் என்­பன அத்­தி­யா­வ­சி­ய­மாகும். முன்­னோக்கி செல்ல வேண்டும் என்றால் பொரு­ளா­தா­ரத்தில் போட்டி நிலை காணப்­பட வேண்டும். அடிக்­கடி சிங்­கப்பூர் சென்று வரு­வதால் அங்கு என்ன கற்றுக் கொள்­கின்­றீர்கள் என பலரும் என்­னிடம் கேட்­ப­துண்டு. ஆனால் எமது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சுவா­ஸி­லாந்து மற்றும் உகண்டா போன்ற நாடு­களில் இருந்தே கற்றுக் கொண்டார். பிரச்­சினை இல்லை. எங்கும் கற்­பதற்கு உரி­மை­யுள்­ளது. அவுஸ்­தி­ரே­லியா சென்று நாடு திரும்பும் போது சிங்­கப்பூர் பிர­த­ம­ருடன் இராப்­போ­சனம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் போது சிங்­கப்பூர் வெளிவி­வ­கார அமைச்­சரும் சந்­தித்தார். 

சிங்­கப்­பூரில் இருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாடு திரும்­பு­வ­தாக இதன்போது தெரி­விக்கப்பட்டது. ஒரே விமா­னத்தில் சந்­திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்­பார்த்து காத்­தி­ருந்தேன். அவ்­வாறு சந்­தித்­தி­ருந்தால் சுவாஸி­லாந்து மற்றும் உகண்டா  ஆகிய நாடு­களின் முறை­மை­களை கைவிட்டு சிங்­கப்பூர் முறை­மைக்கு வந்­த­தை­யிட்டு வாழ்த்து கூறி­யி­ருப்பேன். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக மஹிந்த ராஜ­பக் ஷ எமது விமா­னத்­தில் வரவில்லை. அடுத்த விமா­னத்­தி­லேயே வந்தார். இதற்­கான கார­ணத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிச்­சயம் கேட்பேன். 

புதி­தாக சிந்­திக்க வேண்டும். மஹிந்த புதி­தாக சிந்­திக்­கின்றார் என்றால் நல்­லது. ஒரு இடத்தில் சிக்­கினால் முன்­னோக்கி செல்ல முடி­யாது. புதி­தாக சிந்­தித்­த­மை­யினால் சீனா மாற்­ற­ம­டைந்­தது. ஜப்பான், கொரியா, வியட்நாம், தாய்­லாந்து, மலே­ஷியா, இந்­தோ­னே­ஷியா மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடு­களும் மாற்­ற­ம­டைந்­தன.பங்­க­ளாதேஷ் புதிய மாற்­றத்தை நோக்கி செல்­கின்­றது. இலங்கை ஏனைய நாடு­களை விட வேகமாக மாற்­றத்தை நோக்கி நகர விரும்­பி­யது. ஆனால் போர் முடிந்தும் ஒரு இடத்தில் சிறைப்­பட்டு கிடந்தோம். இதற்­கான காரணம் என்ன? நாம் முத­லா­வ­தாக தேசிய ஒற்­று­மையை பாது­காக்க வேண்டும். 

வேறு நாடு­க­ளுக்கு செல்­வ­தற்கு வாய்ப்­புகள் இருந்தும் இலங்கை மீதுள்ள நேசத்தின் கார­ண­மாக அவர்கள் இங்­குள்­ளனர். தமிழ் பிள்­ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடியமை எந்தளவு முக்கியத்துவம் மிக்கது. ஒரு தாய் பிள்ளைகள் என அடையாளப்படுத்துவது எந்தளவு சிறந்ததாகும். தெரிந்த மொழியில் அவர்களுக்கு தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா ?

தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழிலும் சிங்களம் தெரிந்தவர்களுக்கு சிங்களத்திலும் தேசிய கீதத்தை இசைக்க வாய்ப்பு அளித்துள்ளோம். இவ்வாறு தேசிய ஒற்றுமையை ஸ்தாபித்து நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.