சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஞானவேல் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி பெங்களூரின் அப்போதய மைசூர் மாநிலத்தில் (தற்போதைய கர்நாடகா) "சிவாஜி ராவ் கெய்க்வாட்" என்ற இயற்பெயருடன் பிறந்த ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்துக்கு அவரது வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
"விஷ் யு ஹேப்பி பர்த்டே தலைவா ஒன்லி ஒன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார்" என அவர் பதிவிட்டு இருக்கும் இந்த பதிவு அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தில் திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக சினிமா பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, பெங்காளி மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM