ஜனாதிபதியின் அமைச்சரவையில் எரிபொருள், மின் கொள்வனவு மோசடியாளர்கள் - அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

12 Dec, 2023 | 04:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் அமைச்சரவையில் தான் எரிபொருள், மின்சார கொள்வனவு மோசடியாளர்கள் உள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஊழல் மோசடிகளை கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி செயற்படுகிறார். மாத்தறை மாவட்டத்தின் ஆதரவு அவருக்கு முக்கியம் என்பதால் ஊழலுக்கு கதவுகளை திறந்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

1987ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 120 பில்லியன் ரூபாவை மாத்திரம் நேரடி முதலீட்டை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை காட்டிலும் குறுகிய காலப்பகுதிக்குள் பல பில்லியனை நேரடியான முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார கொள்கைக்கு அமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவில்லை. பூகோள அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி இந்நாடுகள் இலங்கையின் முதலீடுகளை முன்னெடுத்துள்ளன.

கிளிநொச்சி பூநகரியில் 700 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்துக்கு 50 ரூபா என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. மக்களும் அதை நம்புகிறார்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க,

கிளிநொச்சி - பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான புதிய மின்திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்கொள்கை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. புதிய திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க நிலக்கரி, எரிபொருள் கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மோசடி செய்தவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் உள்ளார்கள். பூநகரி மின்னுற்பத்தி திட்டத்தில் 500 மெகாவாட் அலகை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு என்ன ஆட்சியாளர்களின் சொத்தா என கேட்டார். 

அடுத்து, மீண்டும் எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்கள் மாத்திரமல்ல, ஒருசில அரச அதிகாரிகளும் பணம் சம்பாதிப்பதற்காக முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என்றார்.

அவரை தொடர்ந்து, மீண்டும் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க,

ஒருசில மோசடி அதிகாரிகள் தேவை. மோசடியான அமைச்சர்களுக்கும் தேவை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். மாத்தறை மாவட்டத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக ஊழல் எரிபொருள், மின்சார மோசடிகளுக்கு இடமளித்துள்ளார். மறுபுறம் சாகல ரத்நாயக்க சகல மோசடிகளிலும் முன்னிலையில் உள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு;...

2024-09-18 03:06:28
news-image

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை...

2024-09-18 03:18:02
news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06
news-image

தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள்...

2024-09-17 20:20:29