(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். முறைகேடுகள் ஏதும் இடம்பெற்றிருக்குமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நீதிமன்றத்தை நாடலாம். அத்துடன் எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் அவர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரலாம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எரிபொருள், மின்னுற்பத்தி கட்டமைப்பு தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றவை. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பிலான திட்டங்கள் விலைமனு கோரல் இல்லாமல் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் பொது மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு 2021.04.30ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பொது மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கு விடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு அமைய 665 செயற்திட்டமிடலாளர்கள் முன்னிலையாகிறார்கள். இதனை தொடர்ந்து 136 செயற்திட்டமிடலாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். தொழில்நுட்பக் குழுவே திட்டமிடலாளர்களை தெரிவு செய்தது. இந்த குழுவில் ஜனாதிபதியோ அமைச்சரோ அமைச்சரவை உறுப்பினர்களோ அங்கம் வகிக்கவில்லை.
அத்துடன், எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். முறைகேடுகள் ஏதும் இடம்பெற்றிருக்குமாயின், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நீதிமன்றத்தை நாடலாம்.
எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரலாம். அவ்வாறு வந்தால் நாட்டு மக்கள் அவரது அறிவை அறிந்துகொள்வார்கள். ஊழல் மோசடி செய்தவர்கள் தொடர்பான கோப்பு தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இதுவரை ஊழல் மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் தரப்பினருக்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM