நாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக பம்மபலபிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையில் இடம்பெறவுள்ள விளையாட்டுச் சமர் (பிக் மெச்) கிரிக்டெ் போட்டிகள் மதுபாவனையின்றி நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் மது ஓழிப்பு திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு மேற்படி விளையாட்டுச் சமர் முன்னெடுக்கப்படவுள்ளதாக செயலகம் தெரிவிக்கின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி செயலகத்தின் மது ஒழிப்பு திட்டத்திற்கான பணிப்பாளர் சமந்த குமார பம்பலபட்டி இந்து கல்லூரியின் அதிபர் டீ.பி.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி செயலகத்தின் மது ஒழிப்பு திட்டத்திற்கான பணிப்பாளர் சமந்த குமார தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த இரு வருடங்களில் மதுவிற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அரசாங்கம் மது நிறுவனங்களுக்கு சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்து.மது விற்பனை செய்யப்படும் அளவு இரட்டிப்பாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மது விற்பனை இரப்டிப்பாகியுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான விடயமாகும்  மது வரி திணைக்களத்தின் வருமானம் மாத்திரமே அதிகரித்துள்ளது. காரணம் 2014 ஆம் ஆண்டின் பின்புதான் வரிசேகரிப்புச் செயற்பாடுகள் முறையான அணுகுமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக மதுவகை பொருட்களுக்கான வரி வீதம் அதிகரிக்கப்பட்டு அவை முறையாக வசூழிக்கப்ப்பட்டு வருகின்றன அதனால் தற்போது மதுவரி திணைக்களத்தின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சிலர் தவறாக அரத்தப்படுத்திக்காட்ட முற்படுகின்றனர்.

பம்பலப்பிட்டி இந்துக்கலூரியின் அதிபர் டீ.பி.பரமேஸ்வரன் தெரிவிக்கையில்,

தற்போது எமது பாடசாலைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு நன்றி கூறவேண்டியுள்ளது காரணம் இந்த நிகழ்வானது ஜனாதிபதியினுடைய 2 ஆவது வருட நினைவு நாளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளை குறிப்பிடுவதாகும்.

குறிப்பாக கிரிக்கட் உள்ளிட்ட பிக் மெச்கள் நடைபெறுகின்ற போது மது பாவனை பாடசாலை மாணவர்களிடத்தில் கனிசமான அளவு அதிகரிப்பை காணட்டுகின்றது. எமது பாடசாலையில் வருகின்ற 2இ 3இ 4 ஆம் திகதிகளில் கிரிக்கட்ட போட்டிகள் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் அடங்கிய பிக் மெச் சமர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியுடன் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டிகளை நடத்துகின்ற போது மதுபாவனையை தவிர்த்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமான வகையில் புதிய  மேற்படி விளையாட்டுச் சமர் இடம்பெறவுள்ளது.

இதற்கு காரணங்கள் யாதென பார்கின்ற போது மாணவர்களின் மகிழ்ச்சியை மையப்படுத்தி சில தகாத செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சில பாடசாலைகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றைய பாடசாலைகளுக்கும் முறையாக மேம்படுத்தி கொடுக்கபடாத காரணத்தினால் அப்பாடசாலை மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் போது தவறான செயற்பாடுகளுக்கு தூண்டப்படுகின்றனர்.

அவ்வாறான தருணத்தில் தவறான பங்கங்களுக்கு திரும்பும் மாணவர்களின் சிந்தனைகளை உரிய வித்தில் ஆற்றுப்படுத்துவதற்காகவும் ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த விளையாட்டுச் சமர் இடம்பெறவுள்ளது.

அதன் நிறைவாக எதிர்வரும் நான்காம் திகதியன்று நடைபவனி ஒன்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பு சகிதம் முன்னெடுக்கபடபவுள்ளது என்றார்.