நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று செவ்வாய்க்கிழமையும் (12) தொடர்கிறது.
இந்நிலையில், நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இரண்டாவது நாளான இன்றும் தபால் தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதால் தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், 2024 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM