புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மக்களது புள்ளிவிபரங்கள் பிரதேச செயலக வாரியாக சேகரிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட ஆவணத்தில் 'கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்' என குறிப்பிடப்பட்டிருந்ததால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (12) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டபோது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்,
நாங்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிரானவர்கள் அல்லர். கல்முனை வடக்கு என்பது 1993.09.28ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய பிரதேச செயலகமாகும்.
இதனை உப பிரதேச செயலகமாக மாற்றுவது என்றால் மீண்டும் ஓர் அமைச்சரவை தீர்மானம் தேவை. உப பிரதேச செயலகம் என ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும் என்றார்.
அத்தோடு, புள்ளிவிபரவியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராமசேவகர் ஊடாக இவ்விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM