நாடளாவிய ரீதியில் இரண்டு தினங்களில் 12 பேர் மாயமானதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் நால்வர் வயது குறைந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொரலஸ் கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனும் , தருமபுரம் நாதன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனும், அட்டன் பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், புனர்வாழ்வு மையமொன்றிலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 10 திகதி இரவு தப்பி சென்றுள்ளனர்.
மேலும், நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவரும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும், எந்தேரமுல்லயைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 12 பேரில் நோர்வுட் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரும், மொரட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும், பல்லம பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM