சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேரை பொகவந்தலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெற்றசோ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்படவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சிரிபுர பகுதியில் செல்வக்கந்த தோட்டத்தில் தேயிலை மலைப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போதே இன்று அதிகாலை 2 மணியளவிலே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் மாவட்ட நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.