பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.

இந்த தொடரில் புஷ்பகுமார முதல் டெஸ்ட் போட்டியில் 14 விக்கட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 8 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.