எஸ்.ஆர்.தனபாலசிங்கத்தின் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கவிஞர் க.யோகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் போன்றோர் வருகை தந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம், ஓய்வுபெற்ற உப-பீடாதிபதி ந.பார்த்தீபன் ஆகியோருடன் நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம். நியாஸ், ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் ஒ.குலேந்திரன், "ஓசை" சஞ்சிகை ஆசிரியர் மூதூர் முகைதீன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது, வரவேற்புரையை ஊடகவியலாளர் அ.அச்சுதன் நிகழ்த்த, நூல் அறிமுக உரையினை செள.சந்திரகலா வழங்கினார்.
அடுத்து, நூலின் முதல் பிரதியை மூத்த எழுத்தாளர் சூசை எட்வேட் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, நூலின் நயவுரையை கவிஞர் லலிதகோபன் வழங்கினார். விமர்சன உரையினை முதன்மை விருந்தினர் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் வழங்கினார்.
நாடறிந்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம் முதன்மை அழைப்பாளர் உரையை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் ந.பார்த்தீபன் சிறப்பு விருந்தினர் உரையினை ஆற்ற, ஏற்புரையை நூலாசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் வழங்கினார்.
அத்தோடு, அதிபர் சுஜந்தினி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM