காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம்!

11 Dec, 2023 | 05:36 PM
image

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஜெயிலர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’, 'மாஸ்டர்' ஆகிய படங்களிலும் பல பிரபலங்களுடனும் இவர் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சங்கீதா ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்