"ஆலம்பனா" புதுவிதமான ஃபெமிலி என்டர்டெயினராக இருக்கும் - வைபவ்

11 Dec, 2023 | 05:51 PM
image

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி.கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில் ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட "ஆலம்பனா" எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் "ஆலம்பனா"வில் வைபவ், பார்வதி, முனீஸ்காந்த், காளி வெங்கட், யோகி பாபு, ஆனந்தராஜ், ரோபோ ஷங்கர், பாண்டியராஜ், கபீர் சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அத்தோடு, திண்டுக்கல் ஐ லியோனி மிகப் பெரிய கதாபாத்திரத்தில் வைபவின் தாத்தாவாக நடித்துள்ளார்.

"ஆலம்பனா" புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராகவும், சிரித்து மகிழக்கூடிய வகையில் காமெடி படமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் வைபவ் கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "சரோஜா" எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right