மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுவர் இலங்கைக்கு விஜயம்

Published By: Digital Desk 3

11 Dec, 2023 | 04:59 PM
image

மலையக தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். டிசைரி கோர்மியர் ஸ்மித் தெற்காசியாவிற்கு  மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர்  கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், கோர்மியர் ஸ்மித், மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில கல்விக்கான உதவித்தொகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கோர்மியர் ஸ்மித் பங்கேற்கவுள்ளார். இது ஒரு அமெரிக்க அரசாங்க  நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய திட்டமாகும், இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன்களின் அடித்தளத்தை வழங்குகிறது. இந்நிகழ்வில் மூன்று மாத பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு அவர் விருதுகளை வழங்குவார். இந்த முயற்சியானது மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த புதிய தொழிற்தகைமைகளை  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் அதானி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதான...

2025-01-24 18:56:24
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39