உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் இரத்த சோகை (Anemia) நோய் ஏற்படுகிறது. இரத்த சிவப்பணுக்கள் மிகவும் முக்கியமானவை. இது தான் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஒட்சிசனை விநியோகிக்க உதவுகிறது.
ஒருவரது உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு அல்லது இரத்த சோகை இருந்தால், அவரது உடலின் பல பாகங்களுக்கு போதுமான அளவு ஒட்சிசன் கிடைக்காமல், தோல் பிரச்சினைகள், சுவாச நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும்.
குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும்போது, இரத்த சோகை போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க தினசரி சாப்பிடும் உணவுகளை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைக்கீரை சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்கீரை சாறு மிகவும் நல்லது.
முருங்கைக்கீரை சாறு அருந்துவது உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக அமையும். 8 முதல் 10 முருங்கை இலைகளை வேறு ஏதேனும் காய்கறி சாற்றில் கலந்து தினமும் உட்கொள்ளவும்.
அத்தோடு, பொன்னாங்கன்னி கீரை, புதினா கீரை, அரைக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், ஹீமோகுளோபின் பிரச்சினைகள் தீரும். அத்துடன், ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை வீதம் 9 நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.
அதேபோல் ஒவ்வொரு நாளும் நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இதய நோய் தீரும்.
கெரட்டை உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். இதிலுள்ள விட்டமின் ஏ போன்ற சில ஊட்டச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, கெரட்டை சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.
இரத்த சோகை அபாயத்தை நீக்க, அவ்வப்போது பச்சை பீன்ஸ் சாறு குடுக்கலாம். குளிர்காலத்தில் கிடைக்கும் பல்வேறு வகையான பச்சை நிற காய்கறிகள் மற்றும் பச்சை பீன்ஸ் உங்கள் உடலுக்கு விட்டமின் சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை வழங்குகிறது. இது உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
இரும்பு மற்றும் பல வகையான விட்டமின்கள் கீரையில் காணப்படுகின்றன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை உட்பட பல கீரைகளின் சாறு உடலுக்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கீரை சாறு குடித்து வந்தால் இரத்த சோகை போன்ற நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாறு குடிக்கலாம். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதிலுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
இரும்புச்சத்து, கல்சியம், புரதம், காபோஹைதரேற்று மற்றும் நார்ச்சத்து மாதுளம்பழத்தில் உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
- கே.ஆர்.கோபி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM