சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

11 Dec, 2023 | 04:00 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் இன்று திங்கட்கிழமை (11) காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

குறிப்பாக   மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக  நீதியை பெற்றுத் தாருங்கள்,  பல அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் பல மேய்ச்சல் தரைகள், கடற்கரையோரம், காட்டு நிலங்கள் போன்றன பணக்காரர்களுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. அதனை விரைந்து தடுத்து நிறுத்தவும்.

மணல் வளம்  பல வசதி படைத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளால் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் கடல் வளம் முறையற்ற நிலையில் அழிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்திய டோலர் படகுகள் எமது மீனவர்களின் வியாபாரத்தை சிதைக்கின்றனர். 

கடற்றொழில் அமைச்சானது தெற்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகின்ற போதிலும் வடக்கு மீனவர்கள் மிகவும் ஒடுக்கப் படுகின்றார்கள்.  இந்நிலை மாற வேண்டும்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தென்னைமரவாடி கந்தசாமி மலை ஆலயத்தில்...

2024-02-23 13:35:04
news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47