கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Digital Desk 3

12 Dec, 2023 | 12:49 PM
image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும், ”ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என  சந்தேகம் எழுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்நடவடிக்கை தவறானது என்றும், ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளதாகவும், இந்த பதிவு முறைக்கு குறித்த நடைமுறையையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும், ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என்றும், எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53