(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊழல் மோசடியால் முழு நாடும் சர்வதேச நாணய நிதியத்தை தஞ்சமடைந்துள்ளது. ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என ஒட்டுமொத்த மக்களும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஊழலை இல்லாதொழிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.ஊழலை எதிர்த்தவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த 40 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான பொருளதார தீர்மானங்களினாலும்.ஊழல் மோசடியாலும் நாடு இன்று சர்வதேச நாணய நிதியத்தை தஞ்சமடைந்துள்ளது.நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டது.
ஆனால் சாதாரண மக்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைக்கான கடன்கள் மறுசீரமைக்கப்படவில்லை.இந்த கடன்களை மறுசீரமைக்குமாறு நான் அமைச்சரவையில் வலியுறுத்தினேன்.
சாதாரண மக்களின் வங்கி கடன்களை மறுசீரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளுகளும் அரசாங்கம் எடுக்காத காரணத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை தொடர்பான பிரேரணை மீதான வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை ஒட்டுமொத்த மக்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஊழலை இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.அமைச்சரவையில் ஒருவர் யோசனையை முன்வைத்து அதை அவரே நிறைவேற்றிக் கொள்வது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பல்ல , ஒருவரின் தீர்மானத்துக்கு சகலரும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.அப்போது தான் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM