இலங்கையில் இசைத்துறையில்  சாதிக்க நினைக்கும் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த களம் இல்லையே என பல்வேறு வகையிலும் போராடி வருகின்றனர்.

இவ்வாறு போராடும் ஒவ்வொருவரும் தங்களுடைய படைப்புகளை வெளியிடுவதற்குள் பல தடைக் கற்களை கடக்க நேரிடுகிறது.

இவ்வாறு பல தடைகளையுடைத்து, தங்களது முதலாவது படைப்பினை “நிலாச்சோலை” குழுவினர் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

மலையகத்தின் கண்டி - பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த பாடலாசிரியரான  ப.ஜோஷப் தனது நண்பர்களுடனும், உறவுகளுடனும் இணைந்து “நிலாச்சோலை” எனும் அருமையான காணொளிப் பாடலை வெளியிட்டுள்ளார்.

பாடல் தொடர்பில் பாடல் வரிகள், மெட்டமைப்பு, தாயரிப்பு மற்றும் இயக்கம் என்பவற்றை மேற்கொண்ட ப.ஜோஷப் தெரிவிக்கையில்,

பல இசைஅமைப்பாளர்களின் கதவுகளைத் தட்டிய போதும் எந்தகையும் என் நுழைவுக்கான திறவுகோலாக அமைந்ததில்லை. இலங்கையின் ஓரிரு இசை அமைப்பாளர்கள் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பினை வழங்கிய போதும் அது பாடல் பதிவுக்கு செல்லவில்லை.

ஆதலால் தனித்து ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற எண்ணப்பாடு எனக்குள் தோன்றியது.

கடந்த நான்கு வருடத்திற்கு முன் தோன்றியது தான் நிலாச்சோலை மெட்டும் பாட்டும். 

நிலாச்சோலை பாடலை உருவாக்குவதற்கு எனது மனைவி எல்லா வழியிலும் பக்கபலமாகவும், துணையாக இருந்திருக்கிறார். எனது நண்பர்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் என்னோடு முழு மூச்சாக நின்றனர்.

எனது பாடசாலைக் காலத்தில் என்னை ஊக்குவித்து உன்னால் சாதிக்க முடியும் என்று என்னை இன்று வரை வழிப்படுத்திக்கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள் இந்த பாடல் வெளிவருவதற்கு முக்கிய காரணக்கர்த்தாக்கல் என தெரிவித்தார். 

பாடல் வரிகள், மெட்டமைப்பு, தாயரிப்பு மற்றும் இயக்கம் : ப.ஜோஷப்

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு :  பாலா

Mixing & Mastering : v. செந்தூரன்

பாடகர்கள் :  மயூரசங்கர், துவாரகா, ப.ஜோஷப்

நடனம் : வினோத்

ஒப்பனை : வினோதர்ஷன் 

இணை இயக்குனர்கள் : ரமேஸ், ஜோன்ராஜ்

இணை தயாரிப்பு : ஜோன்ராஜ், மணிவண்ணன்

நடிகர்கள் : டில்ஷான், நிஷா