தற்காலிகமானக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் இன்று திங்கட்கிழமை (11) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதற்கமைய, பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் திறக்கப்படவுள்ளது. மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடம் டிசம்பர் 18 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் மேலும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 4 ஆம் திகதி களனிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. அதன்படி, அனைத்து மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (05) காலை 8.00 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM