களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பான முழு பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழு நபர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போதுமான பாதுகாப்பு வழங்குவது பொலிஸாரின் கடமையாகும். எனினும் அதனை தவறவிட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும் தாக்குதலை அவர்களால் தடுக்க முடியவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு பாதாள உலகத் தலைவர் ஒருவர் உட்பட கைதிகளை அழைத்துச் செல்லும் போது சிறைச்சாலையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதாள உலக குழு தலைவர், இரு பொலிஸார் உட்பட 7 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.