மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை கூறுங்கள் து.ரவிகரன்

10 Dec, 2023 | 11:19 PM
image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் முதல் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் தீர்வினை கூறுங்கள் அந்த முடிவில்லாமல் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை  (10) மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முடிவுகள் எதுவுமில்லை. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்.  மனித உரிமை ஆணைக்குழு சம்பந்தமாக அல்லது ஐநா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை.

எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மதங்கள் அழிக்கப்படுகின்றன, கடலிலே மீன்பிடிக்க முடியவில்லை, வயலிலே பயிர்கள் , விவசாயம், தோட்ட செய்கைகள் செய்ய முடியவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை, சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை, இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை என்றால் அவர்களுக்கு ஏன் இந்த சர்வதேச தினம்.? 

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் முதல் இலங்கையில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் தீர்வினை கூறுங்கள் அந்த முடிவில்லாமல் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52
news-image

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்களுடன்...

2025-01-16 16:51:06
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53