ஜனனி ஐயரின் உல்ட்டா விரைவில்

Published By: Robert

06 Jan, 2016 | 11:57 AM
image

விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் ரமீஸ் ராஜா பெற்றுள்ளார். இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.

அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளார்.

“இந்த நல்ல விஷயம் ‘டார்லிங் 2’ படத்தால் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதற்கு முன்பும் இது நடக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பெயரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தான் காரணம்.

‘டார்லிங் 2’ விரைவில் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டிற்குக் காத்திருக்கும் போதே ‘உல்ட்டா’ படத்தின் கதை என்னைக் கவர்ந்து விட்டது. இயக்குனர் ஏஆர்.முருகதாசின் அசோசியேட் இயக்குனரான விஜய் பாலாஜி, எழுத்தாளர் பாலகிருஷ்ணனுடன் இந்தப் படத்தில் இணைந்து இந்த வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இந்தக் கதைக்கு உல்ட்டா என்பது பொருத்தமான ஒரு தலைப்பாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. அது மிகவும் நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டுள்ளது.  ‘சைக்காலஜிக்கல் காமெடியாக ஒரு புதிய வகைப் படமாக இந்தப் படம் அமையும். இரசிகர்கள் முழுவதுமாக இந்தப் படத்தை இரசிக்கும் விதத்தில் படம் இருக்கும். ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அவருடைய நடிப்புத் திறமையை இரசிகர்களுக்கு உணர்த்தும். ரிட்ஸ் மீடியாக ஒர்க்ஸ் நிறுவனம் இந்த ‘உல்ட்டா’ படம் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைக்கிறது. இம்மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் ரமீஸ் ராஜா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03