அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண் இல்லை : சபையில் சுட்டிக்காட்டிய நளின் பண்டார

10 Dec, 2023 | 11:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற கூட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல கூட்ட நடப்பெண் இல்லாமையால் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் இடை நடுவில் கைவிடப்பட்டு பாராளுமன்றம் இன்று பகல் 12 மணியுடன் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விசேட தினமாக பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான மதிப்பட்டுக்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து சட்டமூலம் மீதான விவாதத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.

அவரின் உரையின்போது ஏற்கனவே வரி அறவீட்டில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த 138 பொருட்களில் இருந்து 97 பொருட்களுக்கு மீண்டும் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 41 பொருட்களுக்கும் தொடர்ந்தும் வரி விலக்களிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா குறிப்பிடுகயைில், வரி விலக்களிக்கப்பட்ட பட்டியலில் இருந்து 97 பொருட்களுக்கு மீண்டும் வரி அறவிடுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்த பொருட்கள் என்ன என்ற பட்டியலை வழங்க வேண்டும். அத்துடன் அந்த பட்டியல் சிங்கள தமிழ் மொழியில் வரவேண்டும் என்றார்.

இதற்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பம்பலாபிடிய கூறுகையில், மூன்று மொழிகளிலுமான பொருட்கள் பட்டியலை நிதி அமைச்சிடம் இருந்து பெறுத்தர நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த ஹர்ஷடி சில்வா, தற்போது விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விவாதம் ஆரம்பிக்க முன்னர் அது தொடர்பான விடயங்களை மூன்று மொழிகளிலும் சபைக்கு வழங்க வேண்டும். அதனை செய்யாமல் எப்படி விவாதத்தை கொண்டுசெல்வது என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குறிப்பிடுகையில், அரசாங்கம் வரி அறவீட்டில் இருந்து விலக்களித்துள்ள பட்டியலில் பால்மா இல்லை. அப்படியானால் பால்மாவுக்கும் வரி அறவிடுகிறதா என கேட்டார். அதற்கு இராஜாங்க அமைச்சர் பதிலளிக்கையில், மால்மாவுக்கு வரி அறவிடுவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருக்கிறோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கரியெல்ல, அரசாங்கம் எந்த தயார் நிலையும் இல்லாமலே இந்த விவாதத்துக்கு வந்திருக்கிறது. அரசாங்கத்தின் உண்மை நிலை இதன் மூலம் முழு நாட்டுக்கும் தெரியவருகிறது என்றார். அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,  நான் உதவி செயலாளரை அழைத்து, வரி அறிவிடும் பொருடகள் மற்றும் வரி விலக்களிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் தொடர்பில் தெளிவில்லாமல் இருக்கிறது. அதனால் இதன் பட்டியலை வழங்க வேண்டும். விவசாய பொருட்கள். குழந்தைகளுக்கான போஷணை பொருட்களுக்கும் வரி அறவிடப்பட்டிருக்கிறது. இது மனித நேயமுள்ள அரசாங்கமா என கேட்கிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இந்த சட்டமூலம் தாெடர்பில் 3 மொழிகளிலும் சமர்ப்பித்திருக்கிறோம் என்றார். இதன்போது குறிக்கிட்ட கிரியெல்ல எம்.பி. விவாதத்தை  ஆரம்பித்து ரஞ்ஜித் சியம்பலாபிடிய குறிப்பிடுகையில் வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களில் இருந்து 97 பொருட்களுக்கு வரி அறவிடுவதாக தெரிவித்தபோது, அந்த பட்டியலை வழங்குமாறு தெரிவித்தேன். விவாதத்துக்கு தேவையான பூரண ஆவணங்கள் இல்லாமல் விவாதத்தை கொண்டு செல்ல முடியாது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அநுரகுமார திஸானாயக்க, அரசாங்கம் முன்வைத்திருக்கும் சட்ட மூலத்தில் ஏற்கனவே வரி விலக்களிப்பு செய்யப்பட்டுள்ள  பொருட்கள் மற்றும் சேவை பட்டியல் இருக்கிறது. இதில் தற்போது வரி விலக்களிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள பட்டியல் எது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். 

அதற்கு ரஞ்சித் சியம்பலாபிடிய பதிலளிக்கையில் வரியில்  இருந்து நீக்கப்பட்ட பொருட்களே சட்ட மூலத்தில் இருக்கிறது என்றார். இதன்போது மீண்டும் குறிக்கிட்ட அநுரகுமார திஸாநாயக்க , அப்படியானால் இந்த பொருட்களுக்கு இதன் பின்னர் வரி அறிவிடுவதில்லை. வரி அறவிடுவதில் இருந்து நீக்கப்பட்ட பட்டியலில் இருந்து சில பொருட்கள் தெரிவு செய்யப்பட்டு தற்போது அவை வரி அறவீட்டுக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது. அந்த பொட்கள் மற்றும் சேவை பட்டியலை வழங்குமாறே கூறுகிறோம். அதனை வழங்கினால்தான் எந்த பொருட்கள் புதிதாக வரி அறவீட்டுக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பதை எமக்கு தெரிந்துகொள்ளலாம் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த பட்டியலில் மரணித்த உடல்களின் நல்லடக்கம் மற்றும் தகனம் செய்தலுக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் மரணத்த உயிர்களுக்கும் வரி அறவிடுகிறதா என கேட்கிறேன்.

அதற்கு இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய பதிலளிக்கையில், வரி விலக்களிப்பு பட்டியலே சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறோம். அந்த விடயங்கள் வரி விலக்களிப்பு பட்டியலிலேயே இருக்கின்றன என்றார். அதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம்.பி, வரி விலக்களிப்பில் இருந்து  நீக்கப்பட்ட 97 பொருட்கள் பட்டியலே எமக்கு தேவை. தற்போது எம்மிடமிருப்பது வரி விலக்களிக்கப்பட்டியலாகும் என்றார். அதற்கு இராஜாங்க அமைச்சர் பதிலளிக்கையில் அந்த பட்டியலை பெற்றுத் தரமுடியும் என்றார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட ஹர்ஷடி சில்வா,  இதற்கு தீர்வாக வரி விலக்களிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து 97 பொருட்கள் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதள் பிரகாரம் தொடர்ந்தும் வரி விலக்களிப்புக்குள் அடங்கும் 41 பொருட்களையாவது எங்களுக்கு வழங்குங்கள் என்றார்.

அதற்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, அந்த பட்டியல் சட்டமூலத்தில இருக்கிறது. அதனை பாருங்கள் என்றார். அதற்கு ஹர்ஷ்டி சிவ்வா, அவ்வாறு எந்த பட்டியலும் சட்டமூலத்தில் இல்லை என்றார். இதற்போது குறுக்கிட்ட சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அந்த பட்டியல் இருக்கும் இடத்தை குறிப்பிடுங்கள் என இராஜாங்க அமைச்சருக்கு தெரிவித்தார்.

அவர் அதனை தேடிக்கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில், வரி அறவீட்டு விடயத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தை பாதுகாக்க இந்த சபையில் கூட்ட நடப்பெண் (கோரம்) இல்லை. அதனால் கூட்ட நடப்பெண்ணை சரி செய்யுங்கள் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர், சபையை கொண்டு நடத்த தேவையான 20 பேர் இருக்கிறதா என எண்ணிப்பார்த்தபோது குறைவாக இருந்தமையால் கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு உத்தரவிட்டார். கோரம் மணி  ஒலித்துக்கொண்டிருக்கையில் எதிர்க்கட்சியில் இருந்த சில உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியில் சென்றனர். 

நளின் பண்டார மாத்திரமே இருந்தார். அதேநேரம் ஆளும் கட்சியில் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிடிய, செஹான் சேமசிங்க, சாந்த பண்டார,கயந்த கெட்டகொட, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் உள்ளிட்ட 18 பேர் இருந்தனர். 

கோரம் மணி ஒலிக்கப்பட்ட 5 நிமிடங்களுக்குள் கூட்ட நடப்பெண்ணுக்கு தேவையான 20 உறுப்பினர்கள் சபைக்குள் இல்லாத படியால் சபை நடவடிக்கையை நாளை (இன்று)காலை  9.30 மணி வரை ஒத்திவைப்பதாக  பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். அதன் பிரகாரம் பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூல விவாதம் மதியம் 12மணிக்கு இடைநடுவில் கைவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17