சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

Published By: Vishnu

10 Dec, 2023 | 07:14 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கு தழுவிய இப்போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன் பிரகாரம், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த இப்போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

கடந்த 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித  உரிமை மீறல்கள் தொடர்பாக போராடிவரும் நிலையில், இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டமாக முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமக்கு இழைப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00