மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்! 

10 Dec, 2023 | 04:01 PM
image

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (08) கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு மீனவர்களை கடற்படையினர் தேடி வருவதாக இன்று (10) கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தங்கவேல் தங்கத்துரை மற்றும் 56 வயதுடைய கந்தையா புண்ணியராசா ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கல்குமடு கடற்கரையில் இருந்து பைவர் இயந்திரப் படகின் மூலம் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இந்த இருவரும் வீடு திரும்பாத காரணத்தினால் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்தே, கல்குடா பொலிஸார் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் காணாமற்போனவர்களை தேட ஆரம்பித்தனர். 

எனினும், அவர்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் மீனவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதி...

2024-02-23 12:19:39
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48