தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்க ஒருபோதும் சாத்தியமில்லை - திகாம்பரம்

10 Dec, 2023 | 04:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் எதனையும் செய்ய முடியாது. அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்குரிய காணிகளை பிரித்து வழங்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலமாவது அவருக்கு தோட்ட மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என ப.திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருளாதார பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 20 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் அவர்களுக்கு 800 அல்லது 900 ரூபா கிடைக்கிறது. 20 கிலோவுக்கு குறைவாக பறித்தால் கிலோவுக்கு 50 ரூபா கிடைப்பதில்லை. அதனால் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் எதனையும் செய்ய முடியாது.

அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்குரிய காணிகளை பிரித்து வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். காணி உரிமையை கொடுக்குமாறு நாங்கள் தெரிவிப்பதில்லை. ஏனெனில் 10 பேர்ச காணியை வழங்காமல் இருக்கும் இவர்கள் ஒரு ஏக்கர் காணி வழங்கி அதற்கு உரிமை வழங்கப்போவதில்லை. 

அதனால் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு காணியை வழங்கி, அதில் அவர்கள் தேயிலை பயிர் செய்த பின்னர், அவர்களிடமிருந்து ஒரு கிலோ தேயிலை கொழுந்து 150 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் 20 கிலோ தேயிலை பெற்றுக்கொண்டால், அவர்களுக்கு 3 ஆயிரம் ரூபா கிடைக்கிறது. தேயிலை கொழுந்து அதிகம் இருக்கும் காலத்தில் அதிகமாக பணம் சம்பாதித்துக்கொள்ன முடியுமாகிறது. இதன் மூலம் அவர்களின் தேவைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அவ்வாறு இல்லாமல் நாங்கள் பாராளுமன்றத்தில் இதனை கதைக்கிறோம். அதனை பத்திரிகை, தொலைகாட்சியில் காட்டுவார்கள். அத்துடன் அது முடிவடைகிறது. அதனால் இதனை செய்ய முடியாது என்றால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். முன்னர் 300, 400 பேர் வேலை செய்த தோட்டங்களில் தற்போது 60, 70 பேரே வேலை செய்கிறார்கள். தோட்ட மக்கள் கொழும்புக்கு வேலைக்கு வந்து நாள் ஒன்றுக்கு 2000, 3000 என சம்பாதித்து வருகின்றனர்.

எனவே பெருந்தோட்டத்துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் எமது கோரிக்கையை முன்னெடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அதனை செய்ய முடியாமல் போகும். நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு  லயன் அறைக்கு 7 பேர்ச் காணி வழங்க தீர்மானித்தோம். அதனை தற்போது 10 பேர்ச் வழங்குவதாக தெரிவித்திருக்கின்றனர்.

அவ்வாறு இல்லாமல் அனைவருக்கும் காணி வழங்க தீர்மானித்தால் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும். அதனால் ஒரு லயன் அறைக்கு 10 பேர்ச் காணி வழங்கி, அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்த காணியில் மாடி வீடு அமைத்துக்கொள்ள முடியும்.

அத்துடன், தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்க முடியுமா என எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி முதலாளிமார்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நான் முதலாளிமார் சங்கத்திடம் கேட்டேன். ஆனால், அவ்வாறு எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்கள். மாறாக, மறுசீரமைப்பு செய்யுமாறே தெரிவித்ததாக குறிப்பிட்டார்கள். அதனால் ஜனாதிபதியையும் எங்களுக்கு தெரியும் கம்பனி உரிமையாளர்களையும் எங்களுக்கு தெரியும். இது ஒருபோதும் இடம்பெறாத விடயம். கூட்டு ஒப்பந்தத்துக்கு சென்றாலும் 1700 ரூபாவுக்கு அவர்கள் இணங்கப்போவதில்லை.

அதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகைக்கு வழங்கி தேயிலை பயிரிடச் செய்து அவர்களிடம் தேயிலையை 150 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதே இந்த பிரச்சினைக்கு தீர்வு. அவ்வாறு இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் ஜனாதிபதி இந்த காணிகளையாவது வழங்கினால் அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குறைந்த பட்சம் ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் அதுவும் கிடைக்காமல் போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36