அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேச சுவீகரிப்பை எதிர்த்து பொன்னாலையில் போராட்டம்!

Published By: Vishnu

10 Dec, 2023 | 01:50 PM
image

ராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும் பொன்னாலை. துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொன்னாலை சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது 'எமது கடல் எமக்கு வேண்டும்', 'எமது நிலம் எமக்கு வேண்டும்', 'கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே', 'எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை', 'ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து வரலாற்று தவறைச் செய்யாதே', 'மேய்ச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை தென்னைமரவாடி கந்தசாமி மலை ஆலயத்தில்...

2024-02-23 13:35:04
news-image

யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின்...

2024-02-23 13:10:40
news-image

சஜித்துடன் இணைந்தார் மற்றுமொரு முன்னாள் இராணுவ...

2024-02-23 13:01:58
news-image

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய...

2024-02-23 12:54:36
news-image

வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக...

2024-02-23 12:39:32
news-image

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல்...

2024-02-23 12:36:10
news-image

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

2024-02-23 12:45:27
news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி: கிழக்கு மாகாண...

2024-02-23 12:58:51
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47