நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் - காசாவில் மோதலில் சிக்குண்டுள்ள பெண்

Published By: Rajeeban

10 Dec, 2023 | 12:14 PM
image

guardian

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என காசாவின் கான்யூனிசில் மோதலில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

காசாவின் கான்யூனிசில்வசிக்கும்  அல்மசா ஒவ்டாவின் சிந்தனைகள் அவர் எப்படி உயிரிழப்பார் என்பது குறித்ததாகவே காணப்படுகின்றன.

காசாவின் தென்பகுதி நகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களின்மத்தியில் அகதிகள் முகாமாக மாறியுள்ள ஐநாவின் பாடசாலையில் முகாமில்  அடைக்கலம் பகுந்துள்ள அவர் தனது அச்சத்தினை வெளியிட்டுள்ளார்.

நான் எப்படி உயிரிழப்பேன் என  என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

குண்டின் அல்லது எறிகணையின் சிதறல் ஒன்று எனது தலைiயை தாக்கி நான் உடனடியாகவே உயிரிழக்கலாம் அல்லது நான் உறங்கிக்கொண்டிருக்கும் வேளை எனது கூடாரத்தினை துளைத்துக்கொண்டு வந்து அது எனது உடலில் நுழையலாம் நான் குருதிப்பெருக்கினால் உயிரிழக்கலாம் என பதிவிட்டுள்ள அவர் என்ன நடக்கலாம் ஆயிரம் விதத்தில் மரணம் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவீச்சு என்பது மிகவும் வன்முறைத்தனமானது அருகில் தீவிரமாக இடம்பெறுகின்றது மோதல்கள் ஒருபோதும் நிற்பதில்லை நாங்கள் குளிர் பட்டினி பசி அச்சம் மன அழுத்தம் களைப்பு போன்றவற்றின் பிடியில் சிக்குண்டுள்ளோம் அவர்கள் டாங்கிகளின் எறிகணைகளால் எங்களை தாக்குகின்றனர் குண்டுசிதறல்கள் சுற்றிவர காணப்படுகின்றன எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் :...

2024-11-13 17:31:26
news-image

இந்தோனேசியா - பாலியில் எரிமலை குமுறல்...

2024-11-13 15:48:51
news-image

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து –...

2024-11-13 13:54:12
news-image

காற்றின் தரம் குறைவு : டெல்லியில்...

2024-11-13 13:26:56
news-image

ஏர்ஷோ சைனா ஆரம்பம்: அமெரிக்காவும் பங்கேற்பு

2024-11-13 13:46:41
news-image

இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரை அந்த நாட்டிற்கான...

2024-11-13 11:27:37
news-image

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல்...

2024-11-13 10:17:58
news-image

டிரம்பின் அரசாங்க வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர்...

2024-11-13 08:27:41
news-image

சீனாவில் கார் விபத்தில் 35 பேர்...

2024-11-12 19:35:21
news-image

மணிப்பூரில் பதற்றம் - மாநிலத்தின் பல...

2024-11-12 14:42:49
news-image

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மார்க்கோ...

2024-11-12 12:51:08
news-image

ஹெய்ட்டியில் காடையர் கும்பலின் வன்முறைகள் தொடர்கின்றன...

2024-11-12 12:26:47