உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்களை மையப்படுத்தியே உலக நீதி வழங்கப்படுகிறது - பாலஸ்தீனியர்களின் இன அழிப்பானது இதயத்தை பிளக்கின்றது - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Published By: Rajeeban

10 Dec, 2023 | 12:14 PM
image

இனவழிப்பிற்கான தண்டனையின்மையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பாதி;க்கப்பட்டவர்களிடமிருந்தான சர்வதேச நீதியை  நாடு கடந்த அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் 9 ம் திகதி கடைப்பிடிக்கப்படும் இனவழிப்பு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் அவர்களிற்கு மதிப்பளிக்கும்  மற்றும் இக்குற்றத்தை தடுக்கும் சர்வதேச தினத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதியொன்றை வலியுறுத்தும் செயற்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இனிஒருபோதும் இல்லை என்ற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட இனவழிப்பு குற்றத்தை தடுக்கும் மற்றும் அதனை தண்டனைக்கு உள்ளாக்கும் 75 வருடம் இந்த ஆண்டாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் உலகளாவிய உண்மைகள் மீண்டும் மீண்டும் என்ற கசப்பான உண்மையொன்றை  வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் துயரமான இனஅழிப்பிலும் 2014 இல் ஐஎஸ் அமைப்பினால் யசிடிக்கள் இன அழிப்பிலும் எத்தியோப்பியாவில் திகரேயர்களின் இனவழிப்பிலும் சீனாவில் உய்குர்களின் இன அழிப்பிலும் மியன்மாரில் ரொகிங்யாக்களின் இன அழிப்பு படுகொலையிலும் இந்த உண்மை வெளிப்படுகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது காசாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேலினால் பாலஸ்தீனியர்களின் இனஅழிப்பானது இதயத்தை பிளப்பதாகவும்  தீர்க்கமான சர்வதேச நடவடிக்கையின் உடனடி தேவையை தார்மீக ரீதியில் கோரிநிற்கின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த அட்டுழியங்களிற்கு மத்தியில் ஐக்கியநாடுகளின் இயலாமையையும் உலகநீதி உலகரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்களை மையப்படுத்தியே வழங்கப்படுவதையும் நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,000 வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய...

2024-02-23 11:39:44
news-image

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம்...

2024-02-23 11:38:08
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

2024-02-23 11:29:33
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2024-02-23 11:34:47
news-image

யாழ். நல்லூரில் விபத்து - ஒருவர்...

2024-02-23 11:06:48
news-image

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,500 சிறுவர்கள்...

2024-02-23 10:52:06
news-image

எல்ல மலையில் ஏறிய 22 வயது...

2024-02-23 10:48:26
news-image

இலங்கையின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும்...

2024-02-23 10:26:20
news-image

யுக்திய நடவடிக்கையின்போது மேலும் 729 பேர்...

2024-02-23 10:26:33
news-image

இலங்கை இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறவேண்டும்...

2024-02-23 10:28:46
news-image

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன்...

2024-02-23 10:28:12
news-image

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

2024-02-23 10:22:53