(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை குறித்து சர்வதேசம் நம்பிக்கை கொள்ளும். ஏனைய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பின்போது, நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைக்கப் போவதில்லை. மாறாக கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தால், இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் டொலர் இலாபம் ஏற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,
கடந்த காலங்களில் சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை சிறந்த உறவைப் பேணவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது இலங்கை ஏனைய நாடுகளுடன் பல கூட்டணி கொள்கையையே பின்பற்றுகின்றது. எமது இந்தக் கொள்கையால் சர்வதேசத்தின் நம்பிக்கையை மீளப் பெற்றுள்ளோம்.
அதற்கமையவே அண்மையில் கடன் மறுசீரமைப்புக்கு அனைத்து நாடுகளிடமிருந்தும் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. 12ஆம் திகதி நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து முற்றாக மீண்டுள்ளது என்பதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கின்றோம்.
அதன் பின்னர் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதன் அடிப்படையில் 2024 முதல் இரு வாரங்களுக்குள் ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவருடன் இலகு ரயில் திட்டம் தொடர்பில் அரசாங்கம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்.
அது மாத்திரமின்றி வெகு விரைவில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் நாட்டுக்கு விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். பங்களாதேஷ், பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார வலயங்களை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்து பெற்ற கடனை மீள செலுத்தும் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு வழங்க முடியும்.
ஏனைய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பின்போது, நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைக்கப் போவதில்லை. மாறாக கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தால், இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் டொலர் இலாபம் ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM