இலங்கையில் அனுமதி உரிமம் கொண்ட முதன்மையான வணிக வங்கியான மக்கள் வங்கிரூபவ் 1990 சுவசெரிய அறக்கட்டளையின் முயற்சியான ‘Adopt an Ambulance’ திட்டத்தின் கீழ் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் ஒன்றுக்கான அனுசரணைக்கு நன்கொடையளித்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் அம்புலன்ஸ் சேவையினூடாக இலவச அவசர மருத்துவ உதவியை வழங்குவதற்காக 2016ஆம் ஆண்டில் சுவசெரிய சேவை ஆரம்பிக்கப்பட்டது.
மக்கள் வங்கியின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமான 'Mahajana Mehevara' என்பதன் கீழ், இலங்கை சமூகங்களின் நலனை மேம்படுத்துவது சார்ந்த மக்கள் வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் நாட்டின் சுகாதாரத்துறை கட்டமைப்பிற்கு உதவுவதில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அங்கமாக இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் இதற்கான அனுசரணையை சுவசெரிய அறக்கட்டளையின் தலைவரின் கையளித்து வைத்து கருத்து வெளியிடுகையில்,
“இலங்கை சமூகங்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவுவதற்கு மேற்கொண்டு வருகின்ற எமது முயற்சிகளில் முக்கிமானதொன்றாக அம்புலன்ஸ் சேவைக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள இந்த அனுசரணை காணப்படுகின்றது.
தேசத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற ஒரு வணிக நிறுவனம் என்ற வகையில், இலவச அவசர மருத்துவ சேவைகளுக்கான வசதியைக் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்தகொள்கின்றோம். எந்தவொரு இலங்கை மக்களும் அவரது நிதியியல் நிலவரம் தொடர்பான பாகுபாடின்றி, அவர்களுக்கு மிகவும் முக்கியமான தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய இது உதவும்” என்று குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் கருத்து வெளியிடுகையில், "இலங்கை மக்களின் நலனுக்கான எமது அர்ப்பணிப்பு வங்கிச்சேவைக்கும் அப்பாற்பட்டது என்பதுடன், எங்களது 'Mahajana Mehevara' வர்த்தக சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, நாம் சேவைகளை வழங்கும் சமூகங்களின் மீது நீடித்து நிலைக்கும் நல்விளைவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த சுவசெரிய அமபுலன்ஸுக்கான அனுசரணையானது சுகாதார சேவை போன்ற முக்கியமான சேவைகளுக்கு ஆதரவளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டார்.
1990 சுவசெரிய அறக்கட்டளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் சுவசெரியவுக்கான அரசாங்கத்தின் உதவி தடைபட்டதால், அது வழங்கும் சேவைகளை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு வர்த்தகத்துறையிடமிருந்து நிதியைப் பெறுவதற்காக ‘அம்புலன்ஸ் ஒன்றைப் பொறுப்பெடுப்போம்’ என்ற முயற்சியை அறிமுகப்படுத்தியது.
1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது ரூபா 3.0 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பாரிய நிதிச் சேவை வழங்குனராகும்.
தற்போது,வங்கி நாடு முழுவதும் 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் 14.7 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. மக்கள் வங்கியானது ATMகள், CDMகள் மற்றும் CRMகளை உள்ளடக்கிய 290 விசேட வங்கிச்சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் வருடத்தில் 365 நாட்களும், 24 மணிநேரமும் தங்கள் வசதிக்கேற்ப வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கின்றது.
நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, சுகாதாரத்துறையில் இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதுடன், காஸல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கடந்த ஆண்டு ரூபா 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கியிருந்தது. கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியான 3 இலகுவில் நகர்த்தக்கூடிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் இயந்திரங்களை மக்கள் வங்கி நன்கொடையாக வழங்கியது.
மேலும் மக்கள் வங்கியானது பொரளை டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் ரூபா 3 மில்லியனுக்கும் அதிகமான செலவில் பல அத்தியாவசிய புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு உதவியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM