ராஷ்மிகா மந்தனா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த தெலுங்கு திரைப்படமான "கீதா கோவிந்தம்" மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி வெளியாகிய ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படமான ‘அனிமல்’ வெற்றி பெற்றுள்ளது. இதில் அவர் கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரு குழந்தைக்குத் தாயாக நடித்திருந்தார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கிலும் வெளியான இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது.
இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது. தினம் தினம் இவர் வெளியிடும் புகை படத்திற்கு இவரின் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றன.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 மில்லியனை கடந்துள்ளது. 'அனிமல்' பட வெற்றிக்குப் பிறகே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக அவர் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM