அமீரின் 'மாயவலை' டீசர் வெளியானது!

09 Dec, 2023 | 07:00 PM
image

பிரபல இயக்குனர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் கடந்த 2009இல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாயவலை'. இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்படப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

முதலில் இந்த படத்தை அமீரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தயாரித்தனர். ஆனால் தற்போது வெற்றிமாறனும், அமீரும் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை வெற்றிமாறன், கரு பழனியப்பன், சேரன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் தற்போது வெளியிட்டுள்ளனர். அமீர், சஞ்சிதா ரெட்டி, சத்யா மூவருக்கும் இடையேயான நட்பு, காதல் பின்னணியில் க்ரைம் த்ரில்லராக மாயவலை உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் நன்றாக இருப்பதால் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. விரைவில் "மாயவலை" திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர்...

2025-01-25 16:23:33
news-image

ராமாயணா தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ்...

2025-01-25 16:22:44
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா'...

2025-01-25 15:53:24
news-image

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'ட்ராமா'...

2025-01-25 15:52:56
news-image

மலேசிய பினாங்கில் 17வது எடிசன் தமிழ்...

2025-01-25 09:34:34
news-image

குடும்பஸ்தன் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:20:43
news-image

குழந்தைகள் முன்னேற்ற கழகம் - திரைப்பட...

2025-01-24 16:20:13
news-image

வல்லான் - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:42
news-image

பாட்டல் ராதா - திரைப்பட விமர்சனம்

2025-01-24 16:19:24
news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22