(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை யார் கோரியது. ஜனாதிபதியா, தொழிற்சங்கங்களா? அல்லது பெருந்தோட்ட மக்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் அறிவிப்பு நாடகமாக அமைந்து விட கூடாது. தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 1700 ரூபா சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பெருந்தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்படுகின்றன. தோட்டங்களின் காணிகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பௌதீக வளங்கள் விற்கப்படுகின்றன. தோட்ட கம்பனிகள் பெருந்தோட்டங்களை திட்டமிட்டு வீழ்ச்சிக்கு தள்ளுவதை பிரதான இலக்காக கொண்டுள்ளன.
பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் மீதான விவாதம் நேற்று இடம்பெறும் என்று அறிந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது ஒரு நாடகமாக அமைய கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
1700 ரூபா சம்பளம் என்பதை யார் குறிப்பிட்டது. தொழிற்சங்கங்களா? ஜனாதிபதியா? அல்லது பெருந்தோட்ட மக்களா ?என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 1700 ரூபா ஒருபோதும் சாத்தியமற்றது. 1700 சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசகருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த கோபால் பாக்லேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை கடந்த காலங்களில் கொவிட் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு முகம் கொடுத்திருந்த போது இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதை மறக்க கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM