குருநாகல் - மாவத்தகம பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு காரணம் பணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகரின் கெப் ரக வாகனத்திலிருந்த இரு பணப்பெட்டிகளை காணாத நிலையிலேயே பொலிஸாருக்கு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

மோட்டார்  சைக்கிளில் வந்த இருவர் குறித்த வர்த்தகர் வந்த கெப் ரக வாகனம் மீது துப்பாக்கிப் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 65 வயதான வர்த்தகர்  என்பது குறிப்பிடத்தக்கது.