அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் மோசடி - இந்தியாவில் சம்பவம்

Published By: Digital Desk 3

09 Dec, 2023 | 03:40 PM
image

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் - கட்ச் அதிவேக வீதியில்  நுழைவாயில் உள்ளது.

இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர்.

மேலும், அதிவேக வீதி அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த வீதி வழியாக அதிவேக வீதியில் செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

வர்கசியா நுழைவாயில் வசூல் செய்யும் பணத்தை விட இந்த ‍போலி நுழைவாயில் 50 சதவீதம் குறைந்த கட்டணத்தையே வசூலித்துள்ளது. இதனால் கன ரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் செலுத்துகிற சாரதிகள் போலி நுழைவாயில் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. ஏனென்றால், தங்களுக்கு நுழைவாயில் அனுமதிக் கட்டணத்தில் 50 சதவீதம் இலாபம் கிடைப்பதால் அந்த வழியையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி நுழைவாயில் செயற்பட்டு கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் உரிய இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது போலி நுழைவாயில் செயற்படுகின்றமை தொடர்பில் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட பலர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32
news-image

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில்...

2024-02-22 10:51:12
news-image

கொவிட்தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் -சர்வதேச அளவில்...

2024-02-21 16:44:52
news-image

டெல்லி சலோ போராட்டம்: கண்ணீர் புகை...

2024-02-21 14:01:03
news-image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள்...

2024-02-21 12:02:00
news-image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு...

2024-02-21 11:36:09