(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகதில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த இனம் தெரியாத நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் மஹாநாயக்க தேரருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக வந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மிஹிந்தலை ரஜமஹா விகாரை மஹாநாயக்க தேரர் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தெரிவித்திருந்த கூற்று மிகவும் பாரதூரமானது.
அதாவது மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகதில் இனம் தெரியாத இருவர் கடந்த 3வாரங்களாக இருந்து வந்துள்ளதாகவும், அந்த பூமி பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் அமைப்பினர் மிகவும் அமைதியான முறையில் அங்கு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடடிருந்தார்.
ஆனால் கடந்த 3வாரங்களாக இனம் தெரியாத 2பேர் இராணுவத்தினர் என தெரிவித்துக்கொண்டு அங்கு இருந்துள்ளனர்.
ஆனால் குறித்த இனம் தெரியாத 2பேரும் பொலிஸாருக்கும் சிவில் அமைப்பினருக்கும் பிடிபட்டிருக்கின்றனர். பாதுகாப்பு பிரிவே குறித்த 2பேரையும் கைது செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் இருந்த பொலிஸார்.
இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் யாருக்கும் இந்த இனம் தெரியாத நபர்கள் யார் என தெரியாது. ஆனால் குறித்த 2பேரும் நொச்சியாகம முகாமில் பிரதான கட்டளையிடும் அதிகாரியின் ஆலோசனைக்கமைய இங்கு அனுப்பப்பட்டிருப்பதாக தற்போது தெரியவந்திருக்கிறது.
அதனால் இது மஹாநாயக்க தேரருக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லதுஹ அவரின் உயிரிக்கு பாதிப்பை ஏற்படுத்தவா திட்மிடப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதனால் மஹாநாயக்க தேரரின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக எங்கள் அனைவரும் பொறுப்பு இருக்கிறது. மஹாநாயக்க தேரர் நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்காக வெளிப்படையாக பேசக்கூடியவர்.
இதன்போது பல்வேறு கட்சிகளுக்கும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதனை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டும்.
எனவே இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என கைது செய்யப்ப்டிருக்கும் இனம் தெரியாத குறித்த நபர்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி அவர்கள் விகாரை வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக இருந்துவந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM