(என்.வீ.ஏ.)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் நடப்பு சம்பியன் இந்தியாவும் முன்னாள் இணை சம்பியன் பாகிஸ்தானும் தலா 7 விக்கெட்களால் வெற்றியீட்டின.
ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அர்ஷின் குல்கர்னியின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜம்ஷித் ஸத்ரான் அதிக்பட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் யூனுஸ் (26), நுமான் ஷா (25), அக்ரம் மொஹமத்ஸாய் (20) ஆகிய மூவரும் சுமாரான பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் அர்ஷின் குல்கர்னி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாமன் திவாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அர்ஷின் குல்கர்னி ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களையும் முஷீர் கான் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.
பாகிஸ்தான் வெற்றி
நேபாளத்திற்கு எதிராக ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஏ குழு போட்டியில் நேபாள அணியை 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.
மொஹமத் ஸீஷானின் துல்லியமான பந்துவீச்சு, அஸான் அவய்ஸ், சாத் பெய்க் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
உத்தம் மகர் 51 ஓட்டங்களையும் திப்பேஷ் கண்டல் 31 ஓட்டங்களையும் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர் அர்ஜுன் குமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மொஹமத் ஸீஷான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9.2 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது.
துடுப்பாட்டத்தில் அஸான் அவய்ஸ் ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களையும் சாத் பெய்க் 50 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் குல்சான் ஜா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆகாஷ் திரிபதி 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM