இந்தியாவில் மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் தலவாடே பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவிக்கையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.
பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.
பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒன்பது பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM