ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளைமையப்படுத்திய ‘இமயமலைப் ' பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பௌத்த தேரர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய ஒருங்கிணைந்த தரப்பினருடனான சந்திப்பின் பின்னரேயே குறித்த பிரகடனம் கையளிக்கப்பட்டது.
குறித்த பிரகடனத்தில், முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
தங்களுடைய அடையாளம்; மற்றும் பெருமையை இழந்துவிடுவோமா என்ற பயம் எந்த ஒரு சமூகத்திற்கும் ஏற்படாத வகையில் நாட்டின் பல்வகைமைத்தன்மையைப் பேணிப் பாதுகாத்தலும், ஊக்குவித்தலும்
• பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளல், உள்நாட்டு உற்பத்தியையும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் ஏனையோரின் முதலீடுகளையும், பங்களிப்பையும் ஊக்குவிக்கக்கூடிய, இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக வெற்றிப் பாதையில் செல்வதனை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமான அபிவிருத்தி மாதிரிகளைத் தெரிவு செய்தல்
• மாகாண மட்டத்தில் போதுமானளவு அதிகாரப்பகிர்வினை உறுதிப்படுத்தியும், தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான குடியுரிமையை முன்னிலைப்படுத்தியதும் அதற்கான பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியதுமான ஒரு ரசியலமைப்பை உருவாக்குதல், அதுவரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவாறான அதிகாரப்பகிர்வினைக் கண்ணியத்துடன் நடைமுறைப்படுத்தல்.
• ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டினுள் அதிகாரத்தைப் பகிர்தலும், மத, கலாச்சார மற்றும் ஏனைய அடையாளங்களை ஏற்று அத்தகைய அடையாளங்களுக்கு மதிப்பளிப்பதோடு இனங்களுக்கிடைலான மற்றும் மதங்களுக்கிடையிலான நம்ßக்கையைக் கட்டியெழுப்ப உழைப்பதும்.
• கடந்த கசப்பான காலங்களில் இருந்து கற்றுக்கொள்ள உறுதிகொண்டு, மீண்டும் இவ்வாறான துயரங்கள் ஒருபோதும் ஏற்படாதிருக்கப்; பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒப்புரவு அடைந்த ஓர் இலங்கைக்கான தூர நோக்கு.
• இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளுக்கும் இதர சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் மதிப்பளித்து, சுயாதீனமான மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக இலங்கையானது ஜனநாயகத்துடன் கூடிய சமாதானமான, வளமான உலக நாடுகள் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டுதல்.
என்பன காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரகடனத்தில் அம்பகஹபிடிய தரப்பு அனுநாயகர் மாதம்பாகம அசாஜி திஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், ஸ்ரீ தர்மரஷக்ஷித தரப்பு பொது செயலாளர் கிதலகம ஹேமசார நாயக தேரர் வஜிரவண்ச தரப்பு செயல் மகாநாயகர் பேராசிரியர்.பல்லேகந்த ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்ரீ சத்தர்மவண்ச தரப்பு,உறுப்பினரும் மனித வள மேம்பாட்டு மையத்தின் தலைவருமான கலுபஹன பியரதன நாயக தேரர், மத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக தேரரான நாரம்பனாவே தம்மாலோக தேரர், ஸ்ரீ சதமவண்ச தரப்பு அனுநாயக்கர் வலதர சோபித தேரர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளர்.
அதேநேரம், உலகத்தமிழர் பேரவையின் சார்பில் வேலுப்பிள்ளை குகனேந்திரன் கலாநிதி. சாந்தினி ஜெயராஜா, தனபாலசிங்கம் சுரேந்திரன், சிறிகாந்தா பவகுகன் கலாநிதி.கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், ராஜ் தவரட்ணசிங்கம் ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, புலம்பெயர் அமைப்பான உலகத்தமிழர் பேரவையும், பௌத்த தேரர்களும் ஒருங்கிணைந்துள்ள இந்தக் குழுவானது, சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் எனும் பெயரில் பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக செயலாற்றி வருகின்ற மற்றும் அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையாக, எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி, சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய அமைதிமிக்க வளமான இலங்கைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்ற சங்க உறுப்பினர்களது கூட்டணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM