அஸ்கிரிய மற்றும், மல்வத்த உள்ளிட்ட பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியனவற்றால் கண்டியில் இன்றைய தினம் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைசிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் இலங்கை மக்களுக்காக மக்களிடையே தேசிய உரையாடலை தொடங்குவதில் முன்னெடுப்பதையிட்டு மிகவும் பணிவு அடைகிறோம். இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களுடைய புரிந்துணர்வையும் சமாதானத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் நாம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த ஏப்ரலில் நேபாளத்தின் நாகர்கோட்டில் நடந்த ஆரம்ப கட்டமைக்கப்பட்ட ஈடுபாடுகள் ஒருவர் ஒருவரது கருத்துக்களை புரிந்து கொள்ளவும் தேசிய உரையாடலை தொடங்குவதற்காக கூட்டாக ஒரு கட்டமைப்பு உருவாக்கவும் உதவியது.
இலங்கை மற்றும் புலம்பெயர் சமூகங்களில் முதல் முறையாக இடம் பெறும் இது மாதிரியான முயற்சியை தொடர்வதற்கு வழிகாட்டலாக அமையவிருக்கும் மேலுள்ள தலைப்பை கொண்ட இமயமலை பிரகடனம் என்னும் கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டோம்.
அது இன்றைய தினம் இலங்கையில் ஒரு தேசிய உரையாடலின் உத்தியோபூர்வ தொடக்கத்தை கொடுக்கின்றது. இந்த தேசிய உரையாடலில் எம்முடன்; இணையுமாறு இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அழைப்பு விடுப்பது மட்டுமல்லாமல் உங்களது சொந்த உரையாடல்களை ஒருவருடன் ஒருவர் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடன் இணைந்த நோக்கத்தை நனவாக்க நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம். எல்லா சமூகங்களிலும் உள்ள மௌனமான பெரும்பான்மையினர் தமது சிவில் கடமையை நிறைவேற்றி இந்த தேசிய உரையாடலை உண்மையான தேசிய இயக்கமாக மாற்றுவார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனும் கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் அச்சமும் சந்தேகமோ இல்லாமல் சம உரிமைகளை அனுபவித்து நிம்மதியாக வாழக்கூடிய ஒரு புதிய விடியல் எனும் பரிசு இங்கு தொக்கி நிற்கிறது.
இலங்கை அபாரமான ஆற்றல்களை கொண்ட நாடு அதன் வரலாறு முழுவதும் அப்படித்தான் இருந்தது. நாட்டின் முக்கியத்துவம் எப்போதும் அதன் அளவு மற்றும் சிறிய மக்கள் தொகையை விட அதிக மதிப்பு வாய்ந்திருந்தது. ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சுதந்திரம் பெற்ற இலங்கை அமைதியான மற்றும் வளமான ஜனநாயகமாக மாறுவதற்கு வேண்டிய பல பண்புகளை கொண்டிருந்தது.
பல நூற்றாண்டு கால காலனித்துவத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பல நாடுகளுக்கு இலங்கை முன்னேற்றத்திற்கு உதாரணமாக விளங்கும் என்று கருதப்பட்டது.
இருப்பினும் பல நாடுகள் குறிப்பாக ஒவ்வொரு தேசியங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட நாடுகள் இந்த மாற்றத்தை கடினமாக கண்டன இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
உண்மையில் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அதன் அபிவிருத்திப் பாதை ஈற்றில் 2022 இல் அது கடன் தீர்க்க வகையற்ற நாடாக அறிவிக்கப்படுவதற்கு வழி வகுத்தது.
அனைத்து சமூகங்களிலும் உள்ள ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் இதன் தாக்கத்தை அனைவரும் காணக்கூடியதாக உள்ளது. சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் உந்தப்பட்டோம் அல்லது இன மொழி மத வேறுபாடுகள்காரணமாகவோ இடம்பெறும் அரசியல் ரீதியான வன்முறைகளுக்கும் எதிர் வன்முறைகளும் இலங்கையை வரையறுக்கும் குணாம்சங்கள் ஆகின.
இனப்பிரச்சினையையும் அதன் விளைவாக வரக்கூடிய 30ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு கூறும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய அத்தியாயங்களாகும். அதன் நேரடியான மனித இழப்புக்கள் திகைக்க வைக்கிறது 3000க்கும் மேற்பட்ட இறப்புக்கள் பல்லாயிரக்கணக்கான காணாமல் போனவர்கள் இது ஒரு புதிய தமிழ் புலம்பெயர் நிகழ்வை உருவாக்கியது.
இந்த இழப்புக்கள் எந்த ஒரு சமூகத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. என்றாலும் தமிழ் சமூகத்தின் மீதான விகிதாசார பாதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது. மறைமுக தாக்கங்களும் இதேபோன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல தசாப்தங்களாக அவசரகால ஆட்சி அதீத இராணுவமயமாக்கல், மனித உரிமைகள், சுதந்திரங்களுக்கு மதிப்பின்மை சித்திரவதை, தடுப்பு காவலில் மரணங்கள், பரந்த அளவிலான ஊழல் இவை அனைத்தும் நீண்ட காலமாக புரையோடிக் கொண்டிருக்கும் இன, மத முரண்பாடுகள் உட்பட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறனும் அனுதாபமோ இல்லாத ஒரு சுயநல அரசியல் வர்க்கத்திற்கு வழி வகுத்தது.
அரசியல் மற்றும் ஆட்சி முறைகள் மீதான மக்களின் நம்பிக்கை அடிமட்டத்தில் உள்ளது. இத்தகைய நிலைமைகளின் கீழ் நாடு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இருப்பினும் இந்த சகிக்க முடியாத நிலைமைகள் புதிய விழிப்புணர்வுக்கு வழி வகுத்ததுடன் சில அக்கறை உள்ள குடிமக்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் கார் மதங்களுக்குள் வெள்ளி கோடுகள் போல் உள்ளன.
இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் சார்ந்த சில முக்கிய பௌத்த தேரர்களும், உலக தமிழர் பேரவை உறுப்பினர்களும் இணைந்து அத்தகையதொரு ஆர்வம் உள்ள அணுகுமுறை ஆரம்பித்துள்ளனர்.
இந்த உரையாடல்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் பொதுவான தன்மைகள் இருப்பதை வெளிப்படுத்தியது. இரு தரப்பினரும் சமரசம் செய்ய முடியாத அளவுக்கு வேறுபாடுகளை கொண்ட தீவிர எதிரிகள் என எண்ணப்பட்ட போதிலும் நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஒரு சிறந்த இலங்கையை என்னும் பொதுவான தொலைநோக்கு அவர்களிடம் காணப்பட்டது.
நாட்டில் இன மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் புரிந்து கொள்ள அமையும் மற்றவர்கள் பற்றிய பயமும் தான் அடிப்படை காரணிகள் என்பது தெளிவாகத் தெரிந்தது சிங்கள பௌத்த சமூகம் தமது விரோத சக்திகளாக கருதும் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து தான் வாழும் ஒரே நாட்டின் வரலாறு மற்றும் தனித்துவமான அடையாளத்தையும் பெருமையையும் பாதுகாப்பது பற்றி அச்சம் கொண்டுள்ளது.
மறுபுறம் தமிழ் மக்களின் உணர்ச்சிகளும் அரசியலும் எப்போதும் திட்டமிட்ட அரசன் நடவடிக்கைகளின் மூலம் தான் வரலாற்று ரீதியாக நீண்ட காலமாக வாழ்ந்து
வரும் பகுதிகளில் அவர்களின் வரையறுக்கும் அடையாளத்தையும் இருப்பினும் சாத்தியம் செய்யும் விளக்குகின்றனர் என்ற ஒரு புதிய பிரதிபலிப்பு வட்சத்தால் இயக்கப்பட்டு வருகிறது பௌத்தப்பிக்குகள் பற்றி தமிழ் மக்களிடையே கடுமையான எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன.
அவர்கள் இன மோதல்கள் மற்றும் துன்பங்கள் தொடர்வதற்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறார்கள் ஆனால் இந்த பார்வை பல நூற்றாண்டு காலமாக இலங்கை பௌத்தப்பிக்குகளின் அவர்களின் சமூகங்களின் நலனை மேம்படுத்த உள்ளிட்ட ஆற்றிய பல உன்னத பணிகளுக்கு முக்கியம் கொடுக்கவில்லை அதேபோல பெரும்பான்மை சமூகத்தினர் இடையே உள்ள பொதுவான கருத்து பொருளாதார ரீதியாக வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அழிப்பதில் முனைந்துள்ளனர் என்பதாகும் என்று தமிழரின் இடம்பெயர்வு மற்றும் அவர்கள் தத்தெடுத்த நாடுகளில் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களுக்கு தான் பிறந்த நாட்டில் அவர்கள் சந்தித்த நிலைமைகள் தான் காரணம் என்பதை உணரவோ அங்கீகரிக்கவும் தவறுகிறார்கள்.
இந்த மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் அச்சங்கள் எல்லாம் பகுத்தறிவின் அடிப்படையில் உருவானவை அல்ல என்பதை ஒருவர் காணலாம் பல அரசியல் தலைவர்களும் சில மதப் பிரமுகர்கள் மற்றும் தன்னல அக்கறை உள்ளவர்களும் எப்போதும் இந்த அச்சங்களை சுயநல நோக்குடன் பயன்படுத்திக்கொள்ள முயல்வர் என்பது உண்மையே.எனவே இந்த தேசிய உரையாடலை தொடங்க இலங்கை மக்களாகிய உங்களை நாங்கள் அணுக விரும்பினோம். நாகர்கோர்ட் உரையாடல் இலங்கை முழுவதிலும் மற்றும் புலம்பெயர் சமூகங்களுக்கு இடையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.
இத்தகைய ஒரு செயல்முறைக்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏராளமான மக்களால் அடையாளம் காணக்கூடிய ஒரு வழிகாட்டு ஆவணம் தேவை நாகர்கோவில் செய்யப்பட்ட இமயமலை பிரகடனம் எமது இணைந்த பயணத்தின் ஒரு முக்கிய பயனாகும் இமயமலை பிரகடனம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கருத்தியல் அடிப்படைகளிலும் அதிகளவு சார்ந்திருக்காமல் இலங்கைக்கு ஒரு புதிய மற்றும் முற்போக்கான பார்வையை உணர்த்தி கூறும் ஒரு நடைமுறை ஆவணமாகும்.பௌத்த தேரர்கள் மற்றும் உலக தமிழர் பேரவையாகிய இரு தரப்பினரும் நாம் இலங்கையின் சில சமூகங்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் குழுக்களை அன்றி ஒவ்வொரு குடிமகன் அல்லது குழுவினர் அல்ல என்பதை உணர்ந்துள்ளோம்.
அதேசமயம் நாம் செல்லும் பாதை நேர்மையானது என்பதையும் நாம் அறிவோம். சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை வரலாற்றில் எடுக்கப்படும் எவ்விதமான துணிச்சலான முதல் கூட்டு முயற்சி இதுவாகும்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தலின் அடிப்படையில் தான் சமாதானமும் இஸ்திர தன்மையும் கட்டி எழுப்பப்பட்டு அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்திற்கு வழி செய்ய முடியும் 25மாவட்டங்களிலும் பல் சமய பணிக்குழுக்களை நிறுவும் நோக்கில் பல்வேறு மத சமூகங்கள் மற்றும் மதத்தலைவர்கள் மட்டும் எங்களின் தற்போதைய கவனம் இருக்கும் அதேநிலையில் இமயமலை பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள பல விளைவுகள் தக்க அரசியல் செயல்முறைகள் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
எனவே இந்த முயற்சியை இலங்கையின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அக்கறை உள்ளவர்களுக்கு அறிவித்து இந்த சவாலை எதிர்கொள்ள எழுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஆயினும் இலங்கை மக்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்கள் இந்த அரசியல் செயல்முறைகளை பெறுமதி மிக்கதாக ஆக்குவதில் முக்கிய பங்கை வகிப்பார்கள் புலம்பெயர் சமூகங்கள் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் இந்தியாவடனும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் பன்முனை தன்மையை கொண்டாடுவது பற்றி அது பலமாக பார்க்கப்படும் இந்த நாடுகளில் வாழ்ந்த வாழ்க்கை அனுபவமும் தொழில் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பலருக்கு இலங்கையின் பொருளாதார சமூகம் மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்கு பங்களிப்பதை சாத்தியமாக்குகின்றனர் நமது கூட்டு இலக்கியத்தை அங்கீகரித்து இந்த தேசிய உரையாடலை ஆரம்பிப்பதற்கு வணக்கத்திற்குரிய மாணவியர்கள் உட்பட அனைத்து முக்கிய மதங்களின் மூத்த தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் ஜனாதிபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களினதும் பல் சமய புரிந்துணர்வு மற்றும் சமாதான நல்லிணக்கம் சமத்துவம் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்த உழைக்கும் சிவில் சமூக அமைப்புகளின் ஆசீர்வாதங்கள் கிடைத்ததையிட்டு நாம் உண்மையிலேயே உத்யோகம் அடைந்துள்ளோம்.
இன்று நாம் தொடங்கும் பயணம் நீண்ட மற்றும் கடினமானதாக இருக்கும் அது பொறுப்பு வாய்ந்த நிர்வாக நிறுவன நிறுவனங்களை உருவாக்குவதற்கும் நீண்டகால இனக்குறைகள் மற்றும் பொருளாதார சீர்கேடுகளை தீர்ப்பதற்கும் உகந்த சூழல் ஏற்படுவதற்கு உதவும் இத்தேசிய கலந்துரையாடலின் மூலம் பெறும் வெற்றியானது சாதாரண குடி மக்களுக்கு நேரடி பொருளாதார அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தர நன்மைகளுடன் இலங்கையை அளப்பரிய வகையில் மாற்றும் ஆற்றல் கொண்டுள்ள அதேவேளை சர்வதேச சமூகத்தில் ஒரு முற்போக்கான மரியாதைக்குரிய நாடாக அதன் பெயரை மீட்டெடுக்கும் நாகர்கோர்ட் உரையாடல் இந்த வாரம் இலங்கையில் தொடர்கிறது.இமயமலை பிரகடனம் இப்பொழுது பொது ஆவணமாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஆரம்பித்துள்ள தேசிய உரையாடலை ஒவ்வொரு இலங்கை குடிமகனும் கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் அச்சமோ சந்தேகமோ இன்றி சம உரிமைகளை அனுபவித்து நிம்மதியாக வாழ வைக்கவெல்ல தேசிய இயக்கமாக மாற்றுவது இலங்கை மக்களாகிய அனைவரினதும் தங்கி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM