(எம்.மனோசித்ரா)
இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதிப்பத்திரங்களை இந்திய மீனவர்களுக்கு வழங்குமாறும், அதற்கான கொடுப்பனவை செலுத்துவதாகவும் யோசனையொன்றை முன்வைத்தார்.
எனினும் இந்த யோசனை தொடர்பில் நாம் இதுவரையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை.
ஆழல் கடல் மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். ஆனால் இந்திய மீனவர்களுக்கு சற்று இடமளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகவுள்ளது.
அனைவருக்கும் அனுமதி வழங்காவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் அனுமதியை வழங்குமாறும், இதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களுக்கு இந்தியாவினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் கொண்டு நஷ்டஈட்டை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த யோசனை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM