ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் இன்று முற்பகல்  11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர்  குளவிகொட்டுக்கு இழக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தேயிலை மரத்தின் அடிப்பகுதியில் இருந்த குளவி  கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 4 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.